வெயில் காலத்தை இப்படியும் சமாளிக்கலாம்!!

a93da073e678ae5a66722bf772f59acc

எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், சாறாக எடுத்துக் கொள்வதை விட, கடித்து, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும். கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

எலுமிச்சைப்பழமும், தேன் அல்லது சர்க்கரை அல்லது உப்பும் கலந்து அருந்தினால் தாகம் அடங்கும். நுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு, அதிக அளவு அருந்தலாம்.

கோடையில் தோல் நோய்கள், அரிப்பு, நமைச்சல், படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும். அதனால், குளிக்கும்போது, கடலை மாவு, பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம், வெட்டிவேர் இவற்றைக் கலந்து பொடித்து, உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

ஈரமான ஆடைகளை அணியக்கூடாது. உடல் ஈரத்துடனும், ஆடைகள் அணியக் கூடாது. கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகளே சிறந்தது.

காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து தலை குளிப்பது நலம் பயக்கும்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, மறுநாள் காலை தலைக்கு பூசி குளித்து வந்தால், குளிர்ச்சியாக இருக்கும்.

ae0ed69316688b208c55b31810df0890

இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவ்வாறு இருப்பவர்கள், அவற்றுடன் சிறிது மிளகுத்தூளை சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

கோடையில் மஞ்சள் காமாலை நோய் மற்றும் அம்மை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, மோருடன் கீழாநெல்லியை அரைத்து, கலந்து, காலை வேளையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதேபோல், மூலநோய் உள்ளவர்களும் கோடை காலத்தில் மிகவும் சிரமப்படுவர். இவர்கள் மாங்காயில் உள்ள பருப்பை அரைத்து, மோரில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழம் நிறைய சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.

முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வெள்ளைப் பூசணி, சவ்சவ், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்காய்களை சாலட்டாக மிளகுத் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

கோடை காலங்களில் கனரக ஆலைகளில், வாகனங்களில் பணிபுரிவோருக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து, அநேக பிரச்னைகள் ஏற்படும். இதற்கு சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, மோரில் கலந்து சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியடையும்.

காலையில் கம்பு, சோளம், ராகி கூழ் அல்லது கோதுமை, பார்லி ஆகிய கஞ்சி வகைகளை உணவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது.

கோடைக்கால டிப்ஸ் தொடரும்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews