வெற்றிலை பாக்கு போடுவதில் இத்தனை நன்மைகளா?!

Image may contain: plant and food

சுப, அசுப, ஆன்மீகமென எந்த விருந்தாய் இருந்தாலும் தாம்பூலம் எனப்படும் வெற்றிலை இருக்கும். கடவுளே இல்லன்னு சொல்லும் ஆத்திவாதி வீட்டு விருந்தில்கூட தாம்பூலம் இருக்கும். இந்த வெற்றிலை, பாக்கு போடுவது அத்தனை நல்லது.

indian paan | yourfoodfantasy by meenu gupta

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இந்த மூன்றையும் சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும்போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்வதோடு இதயத்தையும் வலுப்படுத்துகிறது. மனித உடலுக்கு நோய் வருவதற்கான காரணமாக சித்தமருத்துவம் சொல்வது நம் உடம்பில் உள்ள வாதம், பித்தம், சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் இவற்றில் ஒன்றிரண்டு கூடும்போதோ அல்லது குறையும் போதோ நோய் வருகிறது என்று சொல்கிறார்கள் .இது முற்றிலும் சரியான காரணமென ஆங்கில மருத்துவமும் ஒத்துகொண்டது. இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது. இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க இந்த வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உதவி செய்கிறது.

Prawn betel leaf wraps (miang kham)

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை போக்கும். சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கும். வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை போக்கும். அதன்படி பார்த்தால் வெற்றிலை பாக்கு போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது வெற்றிலை பாக்கு, சுண்ணாம்போடு சேர்த்து ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.வாய் துர்நாற்றத்தை தடுக்கும்.

வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி இருப்பதால்தான் தமிழனின் விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும்போது தீய பழக்கமாக மாறி உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது.

More paans.  That's how we do paan

இப்போது வயதானவர்களுக்கு வரக்கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும். சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்துவிடுவதும் உண்டு. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்கு காரணம் அவர்களிடமிருந்த வெற்றிலை பாக்கு போடும் பழக்கமே. ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும்போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

Banarasi Pan

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையை நமது முன்னோர்களால் வகுத்து வைத்திருக்கிறார்கள். காலையில் சிற்றுண்டிக்குபிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். இதன் காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும்போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதேப்போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில்தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை. இதைமீறும்போதும், புகையிலையை சேர்க்கும்போதுதான் தாம்பூலம் ஆபத்தானதாய் மாறுது என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.