வெங்கட் பிரபுவுக்கு வித்தியாசமாக பதில் சொன்ன இயக்குனர் நவீன்

இயக்குனர் நவீன் கடந்த 2013ல் வெளிவந்த மூடர் கூடம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வித்தியாசமாக இருந்தது. இவர் இப்போது அலாவுதீனீன் அற்புத கேமரா படத்தை இயக்கி வருகிறார். கயல் ஆனந்தி ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் நேற்று அவரின் தயாரிப்பான ஆர்.கே நகர் படம் வெளிவர முடியாததற்காக வருத்தத்தை தெரிவித்து கொண்டார். சிலர் மீது வெளிப்படையாக வருத்தம் இருந்தாலும் அதை காட்டியும் காட்டாதது போல் பேசினார். அதில் அவர் அணிந்திருந்தது வடிவேலுவின் பிரபல வசனமான கடுப்பேத்துறார் மை லார்ட்.

அதை சுட்டிக்காட்டி பேசிய நவீன் இவ்வாறு கூறியுள்ளார்.

‘கடுப்பேத்துறார் மை லார்ட்’ என்று கடுப்பை மொத்தமும் டி-சர்ட்டில் இறக்கி வைத்துவிட்டு, நிதானமாய் சாந்தமாய் தன்னிலை விளக்கம் தரும் தங்கள் பக்குவம் பாராட்டுக்குறியது.
இதுவும் கடந்து செல்லும். உன்மையும் உழைப்பும் வெல்லும் என இவ்வாறு நவீன் கூறியுள்ளார்.