Connect with us

கீழே இருந்த மாஸ்க்கை அணிந்த இளைஞர்: அதன்பின் ஏற்பட்ட விபரீதம்

செய்திகள்

கீழே இருந்த மாஸ்க்கை அணிந்த இளைஞர்: அதன்பின் ஏற்பட்ட விபரீதம்

வேலூர் காட்பாடியில் சேர்ந்த இளைஞர் ஒருவர் கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து அணிந்ததால் ஏற்பட்ட விபரீதம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வேலூர் காட்பாடியில் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் சாலையில் மாஸ்க் அணியாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த போலீசார் மாஸ்க் அணியாதவர்களை அபராதம் செலுத்துமாறு கூறிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக உடனே கீழே கிடந்த மாஸ்க் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டார். இதனால் அவர் போலீசாரிடம் இருந்து அபராதம் மற்றும் அடியில் இருந்து தப்பினார்

ஆனால் இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் அவருக்கு திடீரென கொரோனா இருந்ததாகவும், அவருக்கு மட்டுமின்றி அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரவியிருப்பதும் சோதனை மூலம் தெரியவந்தது

இதனையடுத்து அந்த இளைஞர், இளைஞரின் பெற்றோர் மற்றும் தம்பி தங்கை என ஐந்து பேர்களும் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

100 ரூபாய் அபராதம் செலுத்த பயந்து கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து அணிந்ததால் அந்த இளைஞருக்கு மட்டுமன்றி அவரது குடும்பத்திற்கு ஏற்பட்டால் விபரீத்தால் அந்த பகுதியில் உள்ள பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top