அனைத்து தரப்பாலும் பாராட்டப்படும் வெள்ளைப்பூக்கள்

விவேக் நடிப்பில் வெளிவந்துள்ள படம் வெள்ளைப்பூக்கள். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான விவேக் அமெரிக்காவில் உள்ள மகன் வீட்டுக்கு செல்லும்போது அங்கு எதிர்கொள்ளும் விளைவுகளே படம்.

அந்த தெருவில் உள்ள பலர் கடத்தப்படும் நிலையில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி விவேக் இந்த வழக்கை ரகசியமாக துப்பறிகிறார். இது எப்படி என்பதுதான் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர்.

இந்த படத்தை சினிமா பிரபலங்கள் மிக அதிக அளவில் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. படம் வித்தியாசமான திரைக்கதையுடன் இயக்கப்பட்டுள்ளதால் படம் வெற்றி நடை போட்டு வருகிறது.

நீண்ட நாளைக்கு பிறகு விவேக்குடன் படம் முழுக்க சார்லியும் வருவது சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் போன்ற பிரபலங்கள் இப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் இப்படத்துக்கு இன்னும் கொஞ்சம் மவுசு கூடும் என்பது உண்மை.