Connect with us

பாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு

செய்திகள்

பாஜகவில் இணைந்தார் வீரப்பன் மகள்: பெரும் பரபரப்பு

இரண்டாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்த போதிலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை என்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது

இருப்பினும் தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் நோக்கத்தில் பிரபலங்களை அக்கட்சியில் இணைக்கும் பணியில் தமிழக பாஜகவினர் கடந்த சில மாதங்களாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராதாரவி உள்பட பல பிரபலங்கள் அக்கட்சியின் சமீபத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி என்பவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அவர் பாஜக பிரமுகர் முரளிதர ராவ் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சியின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் யாரெல்லாம் பாஜகவில் இணைய உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top