Connect with us

வீணா மாலிக்குக்கு பதிலடி கொடுத்த சானியா

பொழுதுபோக்கு

வீணா மாலிக்குக்கு பதிலடி கொடுத்த சானியா

இந்தியாவில் ஹைதராபாத்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா , இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கை பிடித்ததன் மூலம் பாகிஸ்தான் மருமகளானார்.

இந்நிலையில் உலக கோப்பை போட்டிகள் மான்செஸ்டரில் நடந்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்தது.

மேட்ச் நடப்பதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள் ஒரு ஹோட்டலுக்கு சென்று பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட்டார்கள் என்றும் அதனால்தான் ஒன்றும் சரியாக விளையாடவில்லை என்று பேச்சு எழுந்த நிலையில் சானியாவும் சோயப் மாலிக்கும் அந்த ஹோட்டலில் குடும்பத்துடன் உட்கார்ந்து இருந்த புகைப்படம் வெளியாகி இருந்தது.

இந்த புகைப்படத்தை பார்த்த பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் இப்படி எல்லாம் துரித உணவுகள் கிடைக்கும் இடங்களுக்கு செல்கிறீர்களே நீங்க ஒரு விளையாட்டு வீராங்கனை உங்கள் கணவர் விளையாட்டு வீரர் நீங்க ஒரு குழந்தைக்கு தாய் வேறு இந்த துரித உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என தெரியாதா என வினவியுள்ளார்.

இதற்கு பதில் கொடுத்த சானியா உங்கள் அறிவுரைக்கு நன்றி நான் பாகிஸ்தான் அணி டயடீசியன் இல்லை, நான் எப்போது சாப்பிடுகிறேன், என்ன சாப்பிடுகிறேன் என உங்களுக்கு தெரியுமா என் மீதான் உங்களின் அக்கறைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top