வயிற்றுக்கு கேடு தராத நுங்கு இளநீர் ஜூஸ்

b8f6947961b976bbeeb2581bfc15d561

இது நுங்கு சீசன். நுங்கு உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும். நுங்கு தண்ணீரை உடலில் தேய்த்துக்கொண்டால் வியர்குரு வருவதை தடுக்கலாம். நுங்கு இளசா இருந்தால் சாப்பிட நல்லா இருக்கும். சில சமயத்தில் நுங்கு முத்தினதா வந்திடும், கடிக்க கடினமா இருக்குன்னும், அதை சாப்பிட்டா வயிறு வலிக்கும்ன்னும் தூக்கி போட்டுவிடுவோம். இனி அப்படி தூக்கி போடவேண்டாம். அந்த முத்தின நுங்கில் ஜூஸ் செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்

நுங்கு – 7
இளநீர் – அரை லிட்டர், 
இளநீர் வழுக்கைத் துண்டுகள் – சிறிதளவு.

df389bc343bdbfd68a4c407ef5d2c97d

செய்முறை : 

நுங்கை தோல் நீக்கி பெரிய துண்டுகளாகா வெட்டிக்கனும். இளநீரை உடைச்சு தண்ணியை எடுத்துட்டு, இளநீர் வழுக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும். வழுக்கை முற்றியதா இருந்தால் வேண்டாம். இள நுங்கு, இளநீர் இளவழுக்கை இரண்டையும் பொடிசா நறுக்கிக்கனும்.

வெட்டிய பெரிய துண்டுகளோடு இளநீர் சேர்த்து மிக்சியில் அடித்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதை டம்பளரில் ஊற்றி பொடியாக நறுக்கிய இள நுங்கு, இளநீர் வழுக்கையினை சேர்த்து தேவைப்பட்டால் கொஞ்சம் தேன், சேர்த்து ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பருகலாம்.

உடனடியாக இழந்த சக்தியினை கொடுத்து தாகத்தினை தணிக்கும் ஆரோக்கிய பாணம் இது.

சூப்பரான நுங்கு இளநீர் ஜூஸ் ரெடி.

குறிப்பு: முத்தின நுங்குதான் வேணும்ன்னு இல்ல. இளநுங்கிலும் ஜூஸ் செய்யலாம், நுங்கின் மேல் தோலை எடுத்துடனும். இல்லன்னா ஜூஸ் துவர்க்கும். ஜூஸ் இனிப்பா இருக்கனும்ன்னு நினைச்சா பனங்கற்கண்டு, தேன், சர்க்கரை இதுல விருப்பப்படி எதுவேண்டுமானாலும் சேர்த்துக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews