Connect with us

வாஸ்துப்படி ஊஞ்சல் எங்கு கட்டலாம்?!

சிறப்பு கட்டுரைகள்

வாஸ்துப்படி ஊஞ்சல் எங்கு கட்டலாம்?!

ஊஞ்சல்களில், பொன் ஊஞ்சல், மரத்தினாலான ஊஞ்சல், கயிற்று ஊஞ்சல், ஆலமர விழுதுகளினாலான ஊஞ்சல் என பல வகை உண்டு. தொடக்கத்தில் ஊஞ்சல் ஆடும் பழக்கத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டது ஆலமரமே! ஆலமரத்தின் விழுதுகள் மிக நீண்டும் உறுதித்தன்மையுமாய் இருந்ததே இதற்குக் காரணம். விழுதுகளைப் பிடித்துக்கொண்டு சிறுவர் சிறுமியர் மட்டுமின்றி, பெரியவர்களும் ஆடி  மகிழ்வார்கள்.

இரண்டு விழுதுகளை முடிச்சுப் போட்டு அதில் அமர்ந்துகொண்டு ஊஞ்சல் ஆட, ஒருவர் முன்னிருந்து தள்ளி விட, இன்னொருவர் பின்னிருந்து தள்ளிவிடஎன விளையாடுவது பெருமகிழ்ச்சிக்குரியது. இந்த விளையாட்டு உளவியல்ரீதியாக, நம் கவலைகளைக் காற்றாகப் பறக்கவிட்டு மனதை லேசாக்கி விடுகின்றது.

                   
கயிற்றின் பயன்பாட்டை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்தபின், புளிய மரம், வேப்ப மரம், அரச மரம், புங்கன் மரம் என உறுதியான கிளைகளைக் கொண்ட மரங்களில் கயிற்றைக் கட்டி அதில் சாக்கு அல்லது  போர்வையைச் சேர்த்துக் கட்டி ஆடுவார்கள். இந்த விளையாட்டு கிராமப்புறங்களில் இப்போதும் விளையாடப்பட்டு வருகின்றது.

பொன் ஊஞ்சல்:
நாகரிகம் வளர வளர, மரப்பலகை உறுதிமிக்க தேக்கு மரப்பலகைகளால் செய்யப்பட்டு, இரும்புச் சங்கிலிகளால் இணைத்து, மரங்களில் கட்டி  விளையாடினார்கள். அரண்மனையில் மகாராணியின் அந்தப்புரங்களில்  இருந்த பூங்காவில், தங்க மூலாம் பூசப்பட்டு பொன்னுஞ்சல் செய்து ஆடுவதும் உண்டு. அரசர், அரசி, இளவரசி, இளவரசர் என ஆடி மகிழ்ந்ததாய் குறிப்புகள் உண்டு.பிற்காலத்தில் வசதி படைத்த வீட்டில் மரப்பலகையிலான ஊஞ்சல்கள் கட்டி ஆடி மகிழ்ந்தனர். வசதி இல்லாதவங்க வீட்டுக்கூரை, தோட்டத்து மரமென ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்ந்தனர்.

ஆலயங்களில் இறைவனை வழிபாடு செய்வதற்கும் ஊஞ்சல் பயன்படுத்தப்பட்டது. இதை ‘ஊஞ்சல் உற்சவம்’ என அழைக்கப்படுது. இறைவனையும் இறைவியையும் ஊஞ்சலில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகின்றது. காலப்போக்கில் ஊஞ்சல் எல்லார் வீடுகளிலும் புக ஆரம்பித்தது. ஒரேஒரு ஆள் அமர்ந்து ஆடும் மூங்கிலாலான ஊஞ்சல் வந்தபிறகு ஊஞ்சல் கிராமத்து ஏழைக்கும் ஊஞ்சலாட்டம் கைவைந்தது.

இடவசதி இல்லாத இடமான அபார்ட்மெண்டில்கூட ஸ்டாண்டில் வடிவமைக்கத் துவங்கினர். இன்று அபார்ட்மெண்ட்களில் ஊஞ்சல் என்பது ஒரு கெளரவமான குறியீடாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால், வாஸ்துப்படி, ஊஞ்சலை வீட்டின் நடுஹாலில் அமைக்கக்கூடாது. வீட்டின் பின்புறம் உள்ள மரத்தடியில்தான் அமைக்கவேண்டும். 

Earthy common area

நம் வீட்டுக்குள் வரும், காஸ்மிக் கதிர்கள் (காந்த அலைகள் + சூரியக்கதிர்களுடன் இணைந்த ஆற்றல்) பரவி உயிர் ஆற்றல் என்னும் பயோ-எனர்ஜியாக மாறி இருக்கும். இதை வாஸ்துப்படி அமையப்பெற்ற வீடுகளில் நாம் மிக எளிதாக உணரமுடியும். இந்த காஸ்மிக் கதிர்கள், ஊஞ்சலில் ஆடும்போது சிதைக்கப்படுகின்றது. இதனால், குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பாதிப்பு வரும். 

பிறந்த பச்சிளங்குழந்தைகளுக்கு கட்டும் தொட்டிலுக்கு குறைவான உயிராற்றல் சக்தியே போதுமானது. பெரியவர்கள், தம்பதியர்களுக்கு உயிராற்றல் சக்தி அதிகம் தேவைப்படுவதால்தான் வடகிழக்கு அறையை படுக்கை அறையாகப் பயன்படுத்தக் கூடாது என வாஸ்து சாஸ்திரம் சொல்லுது. குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி, 16 வயதுவரை உள்ளவர்கள் வடகிழக்கு அறையைப் பயன்படுத்தலாம். 

Decorações Indianas: Relax!

‘தூரியாடுகிற வீட்டிலும் ஓரியாடுகிற வீட்டிலும் நிம்மதி இருக்காது. அதாவது, ஊஞ்சல் ஆடுவதும், சண்டை போடுவதும் உள்ள வீடுகளில் நிம்மதி இருக்காது’ என்பது இதனால்தான்.  வீட்டில் குழந்தைகள் கதவு மற்றும் தாழ்ப்பாள் போன்றவற்றை அசைத்து ஒலி எழுப்பினால், வீட்டில் சண்டை வரும் என்று பயமுறுத்துவது உண்டு. அப்படிச் செய்தால் வீட்டுக்குள் வரும் காஸ்மிக் கதிர்களின் சக்தி நமக்கு முழுவதும் கிடைக்காமல் போய்விடும். எனவேதான் குழந்தைகளை கதவு, தாழ்ப்பாள் போன்றவற்றை அசைத்து ஒலி எழுப்பக்கூடாது என்று பயமுறுத்துவார்கள்.

Continue Reading
To Top