பாலா இயக்கிய வர்மா படம் வராது- பட நிறுவனம் அதிரடி

பாலாவின் இயக்கத்தில் வர்மா படம்
திருப்தியில்லை என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது தற்போது எடுக்கப்பட்ட பாணியில் படம் வெளியாகாது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் பாலாவின் பிஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பர்ஸ்ட் காபி அடிப்படையில் தயாரித்தது. இப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்து படத்தில், டீசர் மற்றும் டிரெய்லர் வெளியானது.

இந்நிலையில், எதிர்பார்த்த வகையில் படத்தை இயக்குனர் பாலா உருவாக்கவில்லை என குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம், அர்ஜுன் ரெட்டி படத்தின் ஆன்மா பாதிக்கப்படாமல், மீண்டும் புதியதாக படம் எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. புதிய படத்தில் துருவே முக்கியக் கதாப்பாத்திரத்தில் தொடர்வார் எனவும், இயக்குநர் மற்றும் பிற படக்குழு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.