வர்மா புதிய பெயரில் ஆதித்ய வர்மாவாக

தெலுங்கில் வெற்றி பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தை தமிழில் இயக்குனர் பாலா தமிழில் ரீமேக்க ஈ 4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.

இந்நிலையில் முழுப்படமும் எடுத்து முடித்து ரிலீசுக்கு தயாரான நிலையில் படத்தின் காட்சிகள் சரியாக இல்லை ஆதலால் இப்படத்தை வெளியிடப்போவதில்லை மீண்டும் இப்படத்தின் கதாநாயகனாக நடித்த துருவை வைத்தே இப்படம் இயக்கப்படும் என இந்த நிறுவனம் அறிவித்தது.

அதன்படி இப்படத்தை அர்ஜூன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரியாஷா இயக்குகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பாலிவுட் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்க நாயகன் அதே துருவ் மீண்டும் நடிக்கிறார்.

மீண்டும் அதே நிறுவனம் பல கோடி பட்ஜெட்டில் அதே படத்தை தயாரிக்கிறது. படத்தின் பெயர் ஆதித்யவர்மா என மாற்றப்பட்டுள்ளது.

அதன் போஸ்டரும் வெளியாகியுள்ளது.