வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி

சுமார் 15 கோடி அளவிளான பட்ஜெட்டில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் வர்மா. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனரான பாலா இயக்கி இருந்தார்.

இந்த படத்தை தயாரித்தது ஈ 4 எண்டர் டெயின் மெண்ட் நிறுவனம் இது விக்ரமின் நண்பர் முகேஷின் பட நிறுவனமாகும். தன் மகன் துருவ் நடிக்கும் இப்படம் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணிய விக்ரம் அர்ஜூன் ரெட்டி ரீமேக்கில் துருவ் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணி பாலாவை இயக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

பாலாவுக்கு ரீமேக் படம் செய்வது என்பது சுத்தமாக பிடிக்கவில்லையாம். இருப்பினும் பாலாவை மிக வற்புறுத்தி இப்படத்தை இயக்க வைத்திருக்கிறார்கள். படத்திற்கு இளையராஜாதான் இசை என்பதையும் ஏற்றுக்கொள்ளாத விக்ரம் தெலுகு இசையமைப்பாளர் ரதனை புக் செய்திருக்கிறார்கள்.

இருப்பினும் பாலா ஒரிஜினல் தெலுங்கு படத்தின் சாயல் இல்லாதவாறு நிறைய காட்சிகளை மாற்றி அமைத்திருக்கிறார்.

அந்த காட்சிகளில் ஜீவன் இல்லை என்று படத்தயாரிப்பு நிறுவனமும், விக்ரமும் நினைத்தார்களாம் இதனால் வேறு வழியின்றி படத்தை கைவிடுவதாக அறிவித்து விட்டார்களாம். ஏனெனில் துருவ் நடிக்கும் முதல் படம் சிறப்பாக இருக்க வேண்டும் என விக்ரம் நினைக்கிறாராம் அதனால் நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை என்று இப்படத்தை வெளியிடாமல் மீண்டும் வேறொரு இயக்குனரை வைத்து இயக்க இருக்கிறார்கள்.