Connect with us

‘சர்கார்’ விஜய் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி

பொழுதுபோக்கு

‘சர்கார்’ விஜய் புகைப்படத்தை வெளியிட்ட வரலட்சுமி

sarkar vijay

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமானார் நடிகை வரலட்சுமி சரத்குமார். தற்போது விஜய், வரலட்சுமி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை அருகே நடந்து வருகிறது

இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையில் விஜய் ஒரு குடையை கையில் பிடித்து கொண்டு நின்றிருந்தபோது அதை புகைப்படம் எடுத்த வரலட்சுமி அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார்.

sarkar vijayகையில் குடை, காதில் கடுக்கண் என வித்தியாசமான தோற்றத்தில் விஜய் இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அனுமதி பெற்றே வெளியிட்டதாக வரலட்சுமி கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top