இவ்வருட சிறந்த நடிகைக்கான விருது பெற்றார் வரலட்சுமி

இந்த வருடம் முடிவடைய இன்னும் 13 நாட்களே இருக்கிறது விரைவில் 2019ம் ஆண்டு பிறக்க இருக்கிறது.

இந்த 2018ம் வருடத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சினிமாகலைஞர்களுக்கு பிரபல இணையதள நிறுவனமான பிகைண்ட் உட்ஸ் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

அவ்வகையில் 2018ல் மிக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை வரலட்சுமி, சர்க்கார், சண்டக்கோழி2 இப்படங்களில் வில்லித்தனமான ரோல்களில் நடித்ததின் மூலம் சிறந்த வில்லித்தனமான ரோலில் நடித்த நடிகை என்ற பெயரை பெற்றார்.

அவருக்கு சிறந்த நெகட்டிவ் ரோலில் நடித்த நடிகை என்ற விருதை வழங்கி அந்நிறுவனம் இவரை கெளரவித்துள்ளது.

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கங்ராட்ஸ் பாப்பா என வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.