கடவுள் இருக்கிறாரா கான்செப்டில் வந்து வரவேற்பு பெற்ற படம்-ப்ளாஷ்பேக்

உலகத்தில் எத்தனையோ கோவில்கள் உள்ளன, மசூதிகள், சர்ச்கள் உள்ளன. அனைத்திலும் இறைவன் ஒருவனே பிரதானமாக இருக்கிறான். நமக்கு மீறிய இறைசக்தி ஒன்று என்ற அடிப்படையில்தான் கும்பகோணம், காஞ்சிபுரம் போன்ற நகரங்கள் கோவில் நகரங்களாக உள்ளன.

defc9c3341c5f7b2bae6970a9d572b1b-1

நமக்கு ஏதாவது கஷ்டம் ஏற்படும்போது கடவுள் வந்து காப்பாற்றுவார் என்ற பெரும்பான்மையினரின் நம்பிக்கையிலேயே இந்த உலகம் சுழல்கிறது. அதே நேரத்தில் கடவுள் என்பதே இல்லை. இயற்கைதான் கடவுள் என்றும் எதுவுமே கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களும் இப்பூமியில் நிரம்ப உள்ளனர்.

எத்தனையோ பக்தி படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும் பல அதிசய சம்பவங்கள் அப்படங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் பிரதாப்போத்தன் இயக்கத்தில் வந்த ஆத்மா படம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என வித்தியாசமான கான்செஃப்டில் வந்த படம்.

ஏனென்றால் இதற்கு முன் வெளிவந்த பல படங்கள் இப்போது வந்து கொண்டிருக்கும் படங்களில் கடவுள் இல்லை என்றும், இருக்கிறார் என்றும் இரண்டு கருத்துக்களின் அடிப்படையில்தான் படங்கள் வந்து கொண்டிருந்தன. அப்படி பார்க்கையில் இது ஒரு வித்தியாசமான படமாகும்.

குறிப்பிட்ட தினத்தன்று ஒரு மலை சார்ந்த கோவிலில் கடவுள் காட்சி அளிப்பார் என்றும் அதை பார்க்க பக்தர்கள் கூடுவதும், கோவில் தோன்றிய அமானுஷ்ய வரலாறு சொல்வதும், கடவுள் நம்பிக்கையில்லாத சிலர் அந்த கோவிலை தகர்க்க எடுக்கும் முடிவுகள், ஒரு காதல் இறுதியில் கடவுள் வந்தாரா என சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்துமே அருமையான முறையில் திரைக்கதையாக பின்னப்பட்டிருக்கும் விஷயங்கள்.

ராம்கி, கவுதமி ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை பிரதாப்போத்தன் இயக்கி இருந்தார். அவரின் சகோதரர் ஹரிப்போத்தன் தயாரித்திருந்தார்.

இளையராஜா இசையில் விளக்கு வைப்போம், கண்ணாலே காதல் கவிதை, போன்ற பாடல்கள் வரவேற்பை பெற்றன. படமும் வரவேற்பை பெற்றது. கடவுள் கொள்கையை வித்யாசமாக அணுகிய படமிது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews