Connect with us

கவினை இன்சல்ட் பண்ணிய வனிதா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

பொழுதுபோக்கு

கவினை இன்சல்ட் பண்ணிய வனிதா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து சாக்ஷியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.


50 வது நாட்களைக் கடந்த நிலையில், இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. அதன்படி, இன்னும் சில நாட்களுக்கு பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் ஹோட்டலாக மாறப்போவதாகவும். வரக்கூடிய சிறப்பு விருந்தினரை நன்றாக கவனித்து அனுப்ப வேண்டியது தான் இந்த வாரத்தின் டாஸ்க் எனவும் அறிவிக்கப்பட்டது. 

கவினை இன்சல்ட் பண்ணிய வனிதா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!!

அந்த விருந்தினர் வேறு யாருமல்ல நம்ம வனிதாதான்; அவரை பயத்துடனே வரவேற்பளித்தனர் போட்டியாளர்கள்.


பின்னர் ஹாலில் அனைவரிடமும் பேசினார், தர்ஷன், அபிராமி, முகினுக்கு அறிவுரை கூறிவிட்டு கடைசியில் நம்ம காதல் மன்னன் கவின் பக்கம் திரும்பினார்  வனிதா.

அப்பாவிப் புள்ள போல முகத்தை வைத்துக் கொண்டிருந்த கவினை, வெளுத்து வாங்கினார் வனிதா. நீயெல்லாம் வொர்த்தே இல்ல. உன் வேலை கன்டென்ட் ரைட்டர் கிடையாது, 4 பெண்களைக் காதலிப்பதற்கு இப்படி ஒரு கட்டுக் கதையா? என்பது போல பேசி விளாசி விட்டார். உன் கிட்ட பேச மாட்டேன் என்றும் இறுதியில் கூறினார்.

இது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top