Connect with us

கேப்டன்சி டாஸ்க்கை விட்டுக் கொடுத்த வனிதா!!!

பொழுதுபோக்கு

கேப்டன்சி டாஸ்க்கை விட்டுக் கொடுத்த வனிதா!!!

பிக் பாஸ் 3 ஆரம்பித்த சில நாட்களே ஆனதாகத் தெரிகையில், அதற்குள் 80 வது நாளை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வார இறுதியில் சேரன் வெளியேற்றம் பிக் பாஸ் வீட்டினை சோகமாக்கியது.

சேரன் வெளியேறியபின் மனமுடைந்த வனிதா, நேர்மையாக இருந்தால் பிக் பாஸ் வீட்டில் இடம் இல்லை என்பதுபோல பேசினார். மேலும் தான் அந்தப் போட்டியில் பங்கேற்கமாட்டேன் என்று பிக் பாஸிடம் சொல்வேன், பிக் பாஸ் சரி என்றால் நீ போட்டியிடு என்று கூறினார்.

 ஷெரினுடனான பிரச்சினையை சுமூகத்திற்கு கொண்டுவந்தாலும், அந்தப் பிரச்சினை ஒரு நெருடலாக உள்ளதாகவே தெரிகிறது.

கேப்டன்சி டாஸ்க்கில் பங்குபெற பிக் பாஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது, அப்போது கேப்டன்சி டாஸ்க் வெளியேறாமல் தப்பிப்பதற்கான ஒரு வழியாகவே பார்க்கப்படுகிறது என வனிதா கூறினார்.

மேலும் உள்ளே இருப்பதில் பெரிதாக விருப்பம் இல்லை, நிச்சயம் இந்தமுறை நான் நாமினேட் ஆவேன், மக்கள் விரும்பினால் என்னை பாதுகாக்கட்டும் என்று கூறினார்.

ஆனால் பிக் பாஸ் நீங்கள் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்றார், சரி என்று கூறிய இவர், போட்டி தொடங்குவதற்கு முன்னரே விட்டுக்கொடுப்பதாக கூறி போட்டியிலிருந்து வெளியேறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top