தலைவர் பதவிக்கு நாமினேட் ஆன வனிதா..!! கதறும் ரசிகர்கள்

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. எலிமினேஷன் ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் கொலையாளிகள் நுழைந்து ஒவ்வொரு போட்டியாளர்களைக் கொல்ல வேண்டும் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் வழங்கினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் கொலையாளி டாஸ்க் நடந்து முடிந்தது.

தலைவர் பதவிக்கு நாமினேட் ஆன வனிதா..!! கதறும் ரசிகர்கள்

கலகலப்பாக தொடங்கிய இந்த டாஸ்க், எப்போதும் போல பல சண்டைகளுடன் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் இத்தனை கொலைகளை செய்தது வனிதா மற்றும் முகின் ராவ் தான் என்று பிக் பாஸ் வெளிப்படுத்த செய்தார். 


நேற்றும் பிக்பாஸிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்ற வனிதா, கவினை வேடிக்கையான முறையில் கொலை செய்தார். கொலையாளிகளைக் கண்டுபிடிக்க கவின் மற்றும் மீரா மிதுன் காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.


இறுதியில், துப்பாக்கியை கவினுக்கு தெரியாமல் எடுத்து கவினை வெற்றிக்கரமாக கொலை செய்தனர் இத்துடன் ‘கொடூரக் கொலை’ டாஸ்க் முடிவுக்கு வந்தது. 

அப்போது டாஸ்குகளை சிறப்பாக செய்ததாக மோகன் வைத்தியா, சாக்‌ஷி மற்றும் வனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

இதனால் இவர்கள் மூவர் மட்டுமே அடுத்த வாரம் நடைபெறும் தலைவர் பதிவிக்கு போட்டியிட முடியும் என்று பிக்பாஸ் அறிவித்தார்.