Connect with us

என் மகனை அழைத்து வரவில்லை- கதறி அழுத வனிதா!!

பொழுதுபோக்கு

என் மகனை அழைத்து வரவில்லை- கதறி அழுத வனிதா!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதுவும் கடந்த வாரம் சேரன் இயக்கும் குடும்பப் படம்போல் காட்சியளித்தது பிக் பாஸ் குடும்பம், ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் மிகச் சிறப்பாக என்ட்ரி கொடுத்ததுடன் அனைவருக்கும் உத்வேகம் கொடுத்து சென்றனர்.

வார இறுதியான நேற்றும் நேற்று முன் தினமும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கமல் ஹாசனை சந்திக்க வருகை புரிந்தனர்.

அப்போது கமல் ஹாசன், நீங்கள் எதிர்பார்த்த யார் வீட்டிற்கு வருகை புரியவில்லை என்று கேட்க, சாண்டி தனது மச்சினிச்சியை மிஸ் செய்வதாக கூறினார். அப்போது சேரன் தன்னுடைய மனைவியும், மூத்த மகளும் வரவில்லை என்று வருத்தப்பட்டார்.

அதன்பின்னர் தர்சன் அவர் வந்திருந்தால் நன்றாக வந்திருக்கும் என்று கூறினார், முகினும் தன் தந்தை வருவார் என்று எதிர்பார்த்ததாக கூறினார். ஷெரின் தனது சித்தி மற்றும் தன்னுடைய செல்ல நாய்க்குட்டி குறித்து கூறினார். கவின் நான் ஏற்கனவே என் நண்பன் மட்டும் வந்தால் போதும் என்று சொன்னார்.

அதன்பின்னர் மிக கதறியவாறே பேசிய வனிதா, “லாஸ்லியாவின் தந்தை வரமாட்டார் என லாஸ்லியாவிடம், விஜய் டிவி நிச்சயம் அழைத்துவரும் என்று நான் கூறினேன், அப்போது எனக்கு என் மகன் ஸ்ரீ ஹரி வருவான் என்று தோன்றியது, ஆனால் அது நடக்கவில்லை என்று சொல்லி அழுதார்.

அது பார்ப்போரை கலங்கடிக்க செய்துவிட்டது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top