வனிதா என்ட்ரியால் டம்மியான கஸ்தூரி!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து சாக்ஷியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.


கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளராக கஸ்தூரி வந்தார். பிக் பாஸ் வீட்டில் மாமியார் இல்லாத குறையை தீர்க்க வந்தவர்தான் கஸ்தூரி என்றார் அபிராமி. முதல் 2 நாட்கள் கவின் மற்றும் மற்ற போட்டியாளர்களை கேள்வியால் துளைத்த கஸ்தூரி வனிதா உள்நுழைந்ததும் அடங்கிவிட்டார்.

வனிதா என்ட்ரியால் டம்மியான கஸ்தூரி!!


 

ஷெரின் மற்றும் தர்ஷனை மாலை மாற்றிக்கொள்ள சொன்னது தவறு என்றும், பெயிண்ட் அடித்தல் போட்டியில் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறு என்றும், ரேம்ப் வாக்கில் மதுமிதாதான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கஸ்தூரி மேல் புகார்களை அடுக்கினார் வனிதா.

பிக் பாஸ் வீட்டினை வெச்சு செய்வார் கஸ்தூரி என்று எதிர்பார்த்திருந்த பார்வையாளர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமேதான். வெச்சு செய்ய உள்ளே சென்ற கஸ்தூரியையும் வெச்சு செய்கிறார் நம்ம வனிதா அக்கா.

எத்தனை பேர் வந்தாலும் வனிதா இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப இயலும் என்கின்றனர் போட்டியாளர்கள்.