வனிதாவிடம் உண்மை இருந்தது- கஸ்தூரி

பிக்பாஸ் சீசன் 3ன் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த வனிதா வெளியேற்றப்பட்டார். இவர் பிக்பாஸ் சீசனில் நுழைந்ததில் இருந்தே சண்டை சச்சரவுகள் அதிகம் இருந்தன. சமூக வலைதளங்களில் இவரின் செய்கைகளை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் அதிகம் பெருகினர்.

சண்டைக்கோழியாக அறியப்பட்ட வனிதாவுக்கு நடிகை கஸ்தூரி சப்போர்ட் செய்துள்ளார்.

எடுத்தெறிந்து பேசினாலும் அடிப்படையில் வனிதாவிடம் உண்மை இருந்தது. அவர் காமெராவுக்காக நடிக்கவில்லை. மௌனவிரதம் இருக்கவில்லை… கன்டென்ட் கொடுக்கவேண்டும் என்று கூத்தடிக்கவில்லை, அழவில்லை… வால்யூம் அதிகம் , ஆனால் சுவாரசியமும் அதிகமோ என கஸ்தூரி கூறியுள்ளார்.