வனிதா வலையில் மாட்டிக் கொண்ட தர்ஷன்…

இந்த வாரத்தின் லக்ஸுரி பட்ஜெட்டில் ’கொடூரக் கொலை’என்கிற புதுமையான டாஸ்க் வழங்கப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் கொலை செய்யப்பட்டது உடன் டாஸ்க் முடிவுக்கு வந்தது.

அதை தொடர்ந்து கொலையாளிகள் யார் என்பதை அறிவித்தார் பிக்பாஸ். அப்போது வனிதா மற்றும் முகின் ஆரவ் முன்வந்து நின்றவுடன் போட்டியாளர்கள் ஆச்சர்யமடைந்தனர். 

இந்த போட்டி முடிவுக்கு வந்துவிட்டாலும், டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்கள் யார்? சொதப்பியவர்கள் யார்? என்பது குறித்து பிக்பாஸ் கேள்வி எழுப்பியது போது, போட்டியாளர்களிடையே பிரச்சினை வந்தது.

வனிதா வலையில் மாட்டிக் கொண்ட தர்ஷன்…

இன்றைய ப்ரோமோவில் வனிதாவுக்கும், தர்ஷனுக்கும் சண்டை ஏற்படுகிறது. அப்போது தர்ஷன், வனிதாவை திட்டுகிறார். இதனால் கோபமான வனிதா, மைக்கை கழட்டி எறிந்து பிக்பாஸுடன் பேசவேண்டும் என்று கத்துகிறார். 

அடுத்து வனிதா வலையில் மாட்டிக் கொண்டது  தர்ஷன்தான் போலும். மீராவில் தொடங்கி, மதுமிதா, சேரன், பாத்திமா பாபு, அபிராமி, கடைசியாக தற்போது மாட்டிக் கொண்டவர் தர்ஷன் தான்.

இந்த செவுறு யாரையாச்சும் காவு வாங்காம விடாது போல என்று கலாய்த்து தள்ளுகின்றனர் ரசிகர்கள்.. அடுத்து இந்தப் பட்டியலில் இணையப் போவது சாக்ஷியாகக் கூட இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. e