Connect with us

தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்: வைரமுத்து

செய்திகள்

தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்: வைரமுத்து

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சைகள் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி என்ற சரத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டாலும் மூன்று மொழி கல்வி என்பதை பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

குறிப்பாக தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

அண்ணா காலத்திலிருந்தும் அதற்கு பின்னர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என வரிசையாக அனைவருமே இருமொழிக் கொள்கையை கடைபிடித்து வருகின்றனர் என்றும் அதே போன்று முதல்வர் பழனிச்சாமியும் இருமொழிக் கொள்கை கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும்,
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும்
இருமொழிக் கொள்கைதான்.
முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத்
தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை.
தேசியக் கொடியை மதிப்போம்;
திராவிடக் கொடியும் பிடிப்போம்.

வைரமுத்துவின் கவிதை வடிவ இந்த டுவிட்டுக்கு பாராட்டுக்களும் எதிர்ப்புகளும் பதிவாகி வருகிறது

Continue Reading
To Top