வைபவ் நடிக்கும் காட்டேரி

வைபவ் இதற்கு முன் நடித்த பேய்ப்படம் ஹலோ நான் பேய் பேசுறேன். இந்த படத்துக்கு பிறகு வைபவ் நடிக்கும் பேய்ப்படம் காட்டேரி. வித்தியாசமான திகில் படமாக தயாராகி வரும் இப்படத்தை ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இப்படத்தை டீகே இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன் ஹாரர் காமெடி படமாக கிருஷ்ணா, ஓவியா, கருணாகரனை வைத்து யாமிருக்க பயமே படத்தை இயக்கியவர் ஆவார்.

அந்த படம் முழுக்கவே பேய்ப்படம் போல தெரியாமல் காமெடிப்படமாகவே இருக்கும். இந்தப்படமும் அவ்வகையான கதைதானா என படம் வந்த பிறகுதான் தெரியும்.

இப்படத்தின் 3டி போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் வைபவ், வரு சரத் , ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கொடூரமான பெயர் உள்ள பேயைத்தான் கிராமப்பகுதிகளில் காட்டேரி என சொல்வதுண்டு அந்த அடிப்படையில் இப்படமும் பயங்கர த்ரில்லாக இருக்கும் என நம்புவோம்.