தம்பி சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த அட்லி

சமந்தா நடிப்பில் உருவான ‘யூடர்ன்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தள பயனாளிகள் இந்த படத்தின் டிரைலருக்கு பெரும் பாராராட்டுக்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமந்தாவின் ‘யூடர்ன்’ படத்தின் டிரைலரை கோலிவுட் திரையுலகினர்களும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளனர். குறிப்பாக ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படத்தின் போது சமந்தாவை ‘தம்பி’ என்று அன்பாக அழைக்கும் அட்லி, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சமந்தா, சூப்பர் டிரைலர் டா தம்பி, வேற லெவலில் இருக்குது படம், தியேட்டரில் இந்த படத்தை பார்க்க காத்திருக்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த அட்லிக்கு சமந்தா அதே டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அட்லி அடுத்த இயக்கவுள்ள ‘விஜய் 63’ படத்திலும் சமந்தாவுக்கு ஒரு முக்கிய கேரக்டர் இருப்பதாக கூறப்படுகிறது.