Connect with us

அமைச்சரின் மனைவிக்கு கொரனோ: அமைச்சர் உட்பட 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

செய்திகள்

அமைச்சரின் மனைவிக்கு கொரனோ: அமைச்சர் உட்பட 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் அமைச்சரின் மனைவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அமைச்சர் உள்பட 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் சத்தியபால் மகராஜ். இவருடைய மனைவி அமிர்தா என்பவருக்கும் கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்தது. இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்

இதனை அடுத்து அமைச்சர் மற்றும் அவரது வீட்டிலுள்ள குடும்பத்தினர்கள், ஊழியர்கள் உள்பட 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

Continue Reading
To Top