Connect with us

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்டிச்சை வீழ்த்தினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு தகுதி

மற்றொரு ஆட்டத்தில் சீன வீராங்கனை கியாங் வாங் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஷ்லி பார்டியை தோல்வியுறச் செய்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-7 (1-7), 6-3, 7-5 என்ற செட் கணக்கில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை  வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 7-5, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ஸ்விடோலினா, ஜோஹன்னா கோன்டாவினை எதிர்கொள்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top