Connect with us

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நடால்

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால், இத்தாலியின் மேட்டியோ பிரிட்டினியை சந்தித்தார்.

 விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் துவக்கம் முதலே அதிரடியாக ஆடினார், இறுதிப் போட்டிக்குள் எப்படியும் நுழைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் நடால் 7-6, 6-4, 6-1 என்ற செட்கணக்கில் மேட்டியோ பிரிட்டினியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அத்துடன், ரோஜர் பெடரருக்குப் பிறகு ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் குறைந்தது 5 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் நடால் பெற்றுள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மெத்வதேவ், பல்கேரிய வீரர் திமித்ரோவை 7-6, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

வெற்றி குறித்து நடால் கூறுயதாவது, “இறுதிப் போட்டியில் எப்படியாவது நுழைய வேண்டும் என்று மனதில் கொண்டு விளையாடினேன், இந்த முறை இறுதிப் போட்டியிலும் வென்று வெற்றி வாகை சூடுவேன். மெத்வதேவ் இறுதிப்போட்டியில் டஃப் காம்பிட்டிஷன் கொடுப்பார் என்று தெரிகிறது. நிச்சயம் பயிற்சி செய்து சிறப்பாக ஆடுவேன்” என்று தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top