Connect with us

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை வரலாற்று சாதனை!!

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை வரலாற்று சாதனை!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச்  7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச்சை  எதிர்கொண்டார்.

மிகச் சிறப்பாக ஆடிய பெலின்டா பென்சிச் டோனா வெகிச்சை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு பெல்ஜியம் வீராங்கனை எலிசி மெர்டென்சை எதிர்கொண்டார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை வரலாற்று சாதனை!!

எதிர்பார்த்ததைப்போல் பியான்கா ஆன்ட்ரீஸ்கு 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீராங்கனையான எலிசி மெர்டென்சை வீழ்த்தி அரைஇறுதி வாய்ப்பினைப் பெற்றார்.

அமெரிக்க ஓபன் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு என்பது குறிப்பிடத்தக்கது. அரைஇறுதியில் பெலின்டா பென்சிச், ஆன்ட்ரீஸ்கு மோதுகின்றனர்.

இதுகுறித்து ஆன்ட்ரீஸ்கு கூறுகையில், “அரை இறுதிக்குள் நுழைந்த முதல் கனடா வீராங்கனை என்ற பெயரை நான் நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன். மேலும் அதிக அளவில் வரலாற்று சாதனைகளைப் படைக்க முனைப்போடு செயல்படுவேன்” என்று கூறியுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top