Connect with us

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 100 வது வெற்றி பெற்ற செரீனா!!

விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 100 வது வெற்றி பெற்ற செரீனா!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் ஜாம்பவான் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சீனாவின் வாங் கியானை  எதிர்கொண்டார்.

 துவக்கம் முதலே அசத்தலாக ஆடிய இவர், எப்படியாவது வெற்றியினைப் பெற்றுத் தீரவேண்டும் என்பதில் முனைப்போடு செயல்பட்டார்.

செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-0 என்ற நேர் செட்டில் சீனாவின் வாங் கியானை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 100 வது வெற்றி பெற்ற செரீனா!!

அவருடைய தொடர் தோல்விகளிலிருந்து மாற்றத்தினைக் கொண்டுவந்து ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் செரீனா.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாதெனில் இது செரீனாவின் 100-வது வெற்றியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் உக்ரைன் வீரர் ஸ்விடோலினா  6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டாவை வீழ்த்தினார்.

 அமெரிக்க ஓபனில் அரைஇறுதிக்கு தகுதியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினாவினை செரீனா எதிர்கொள்கிறார். இந்த 100 வது வெற்றிக்கு ரசிகர்கள் பலரும் செரீனாவிற்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top