Connect with us

ஆரம்பப் பள்ளிகளைத் திறந்த இங்கிலாந்து அரசாங்கம்!!

செய்திகள்

ஆரம்பப் பள்ளிகளைத் திறந்த இங்கிலாந்து அரசாங்கம்!!

கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் ஓரளவு தாக்கத்தினை ஏற்படுத்திய நிலையில், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திலும் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது, இதுவரை பல லட்சங்களைத் தாண்டிய பாதிப்பால் இங்கிலாந்து இயல்பு வாழ்க்கைக்கு வர முடியாமல் போராடியது. உயிர் இழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பொருளாதாரமானது பெரிய அளவில் வீழ்ச்சியினைச் சந்தித்தது. இந்தநிலையில் பொருளாதார வீழ்ச்சியினைக் கட்டுக்குள் கொண்டு வர ஜூன் மாதத்தில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படுவதாய் இங்கிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.

ஆரம்பப் பள்ளிகளைத் திறந்த இங்கிலாந்து அரசாங்கம்!!

அந்தவகையில் இன்று மிகப் பெரிய அளவில் பாதுகாப்பு வசதிகளுடன்  ஆரம்ப பள்ளிகள் திறக்கப்பட்டன. பெற்றோர்கள் பயத்துடன் பள்ளிக்கு அனுப்பினாலும், இன்று லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளுக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சானிடைசைர் பயன்படுத்துதல், மாஸ்க் மற்றும் கிளவுஸ் அணிதல், சமூக இடவெளியினைக் கடைபிடித்தல் என பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக குழந்தைகள் கடைபிடிப்பதனை உறுதி செய்தனர்.

Continue Reading
To Top