Connect with us

உடுமலை சங்கர் கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனுவின் அதிரடி தீர்ப்பு

செய்திகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனுவின் அதிரடி தீர்ப்பு

உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில் சங்கரின் மனைவி கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு சற்று முன் வெளியாகி உள்ளது

இந்த தீர்ப்பில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் தண்டனை பெற்ற கௌசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கௌசல்யாவின் தாய், தாய் மாமன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் ஆகியோரும் விடுவிக்கப்பட்டது செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் குற்றவாளிகள் 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாக இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்ராஜ் என்பவரின் ஆயுள் தண்டனை, மணிகண்டன் என்பவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தண்டனையும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் 3 பேர் கௌசல்யாவின் தாய் உள்பட 3 பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையினர் வழக்கு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை, தாய் இருவருமே விடுதலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading
To Top