Connect with us

உதயநிதியை ‘சைக்கோ’ ஆக்கிய மிஷ்கின்

பொழுதுபோக்கு

உதயநிதியை ‘சைக்கோ’ ஆக்கிய மிஷ்கின்

மிஷ்கின் இயக்கிய ஒருசில படங்களில் ஹீரோ சைக்கோ போல் தான் இருப்பார். அல்லது காட்சிகள் சைக்கோத்தனமாக இருக்கும். இந்த நிலையில் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு ‘சைக்கோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு ‘சைக்கோ’ என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

அதேபோல் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்தி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்க சிவந்த வானம்’ படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Continue Reading
To Top