உதயநிதி படங்களில் காஜல் நடிக்க கூடாது என அனுதாபிகள் வலியுறுத்தல்

பி.எம் நரேந்திர மோடி என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகனாக விவேக் ஓபராய் நடித்திருந்தார். இவர்தான் சுனாமியின்போது கடலூர் மாவட்ட மக்களுக்கு முழு வீச்சில் உதவியவர்.

விவேக் ஓபராய்தான் மோடியாக நடித்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனை வற்புறுத்தின. கோர்ட்டுக்கும் சென்றன.
ஆனாலும் படத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.

இந்த படத்தை வரவேற்று நடிகை காஜல் அகர்வால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு உதயநிதி ஆதரவாளர்கள் சிலர் உதயநிதி தனது அடுத்த அடுத்த படங்களில் காஜலுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என கூறியிருக்கிறார்கள்.

எனினும் இதற்கு முன்னரே நண்பேண்டா படத்தில் காஜல் அகர்வாலை புக் செய்து விட்டு கால்ஷீட் குழப்பத்தால் திடீரென நயன் தாராவை புக் செய்த சர்ச்சை 2015ல் நடந்தது. வாங்கிய அட்வான்ஸ் பணத்தை காஜல் திருப்பி தர மறுத்ததும். உதய் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ததும் நடந்தது.

அதனால் எப்போதுமே உதயநிதி படத்தில் காஜல் நடிப்பது சந்தேகமே.