உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காய் தயிர் பச்சடி


70954bad3ff99c652f4a7c966514eb50-1

சுரைக்காயில் நீர்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் சூடு தணிவதற்காக இதனை உணவில் சேர்ப்பது நல்லது. சுரைக்காய் உடல் எடையைக் குறைக்கும். இப்போது சுரைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் – 200 கிராம் 
பெரிய வெங்காயம் – 1 சிறியது
தயிர் – 1 கப்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 இணுக்கு

தாளிக்க :

கடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணெய்

பொடிக்க :

இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 5 பற்கள்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1/2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 2 இணுக்கு

செய்முறை :

* சுரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். அல்லது துருவிக் கொள்ளவும்.

* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

* பொடிக்க கொடுத்த பொருட்களை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் சுரைக்காயை போட்டு, நன்கு கிளறவும், சூட்டில் சுரைக்காய் லேசாக நீர்விடும்.

* அதற்கு பின்னர் தேவையான அளவு தன்ணீர் தெளித்து மூடி வேகவிடவும். உப்பு போட்டு, வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

* ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். 

* அடித்த தயிரில் பொடித்த பொருட்களை போட்டு நன்றாக கலக்கவும். 

* அடுத்து அதில் வேக வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கலக்கவும்.

* சத்தான சுரைக்காய் தயிர் பச்சடி ரெடி.

* இந்த பச்சடியை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.