Connect with us

தொடரும் டிடிவி கட்சியின் சின்னம் குழப்பம்

செய்திகள்

தொடரும் டிடிவி கட்சியின் சின்னம் குழப்பம்

அதிமுகவில் இருந்து பிரிந்த தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை மதுரை மேலூரில் தொடங்கினார். தொடங்கிய வேகத்தில் சென்னையின் காலியாக இருந்த ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

அந்த நேரத்தில் இவருக்கு தற்காலிக சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்கியது. அதில் நின்று வெற்றியும் கண்டது. இருப்பினும் பிரதான கட்சியாகி விட்ட அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்தது.

கட்சியை பதிவு செய்யவில்லை என்ற காரணத்தால் அவருக்கு தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னம் மறுக்கப்பட்டு பரிசுப்பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆங்காங்கே அமமுக வேட்பாளர்கள் நிற்கும் இடத்தில் அதே வேட்பாளர் பெயர் கொண்ட சுயேட்சைக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் அமமுகவிற்கு ஓட்டுக்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குக்கர் சின்னம் என்று மறந்தவாறு அமமுகவிற்கு என்று நினைத்து சுயேட்சைக்கு ஓட்டு விழவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top