பிக்பாஸ் வீட்டுக்குள் டிஆர்பி நாயகி வனிதா!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து சாக்ஷியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.


காலையில் குறைதீர் கூட்டம் முடிந்த பிறகு, இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்று முடிந்தது.

அதன் பின்னர் 50 வது நாட்களைக் கடந்த நிலையில், இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. அதன்படி, இன்னும் சில நாட்களுக்கு பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் ஹோட்டலாக மாறப்போவதாகவும். வரக்கூடிய சிறப்பு விருந்தினரை நன்றாக கவனித்து அனுப்ப வேண்டியது தான் இந்த வாரத்தின் டாஸ்க் எனவும் அறிவிக்கப்பட்டது. 


டாஸ்க்கின்படி பிக்பாஸ் ஹோட்டலின் மேனேஜராக சேரனும் சமையலராக மதுமிதாவும், உதவிகளை செய்ய கஸ்தூரி, தர்ஷன், அபிராமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கிளீனிங்க் செய்யும் பணிகளுக்கு சாண்டி மற்றும் கவின் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். விருந்தினரை மகிழ்விக்கும் டாஸ்க் லோஸ்லியாவுக்கும் முகினுக்கும், ஸ்பா செய்யும் பணி ஷெரீனுக்கும் கொடுக்கப்பட்டது.


போட்டியாளர்களுக்கு டாஸ்க்கின் இறுதியில் விருந்தினர் ரேட்டிங் வழங்குவார் என்று அறிவித்தார் பிக் பாஸ். பெல் அடித்தவுடன் போட்டியாளர்கள் சீருடை அணிந்தனர். கதவு திறந்து நடனக் கலைஞர்கள் டான்ஸ் ஆட, இறுதியில் வனிதா விஜயகுமார் உள்ளே வந்தார்.