ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தமிழகம் வருகை

தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வருகிற 18ம் தேதி தேர்தல் நடப்பதையொட்டி அனல் பறக்கும் பிரச்சாரங்கள் இன்றுடன் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் பிரதான கட்சியான அதிமுக, திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்குமே பெரும் போட்டி உள்ளது.

தேர்தலை எதிர்பார்த்து வாக்களிக்க பல இளம் வாக்காளர்கள் புதிய வாக்காளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்றோடு முடிவடையும் வேளையில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற்காக சென்னை வருகிறார்.

திமுகவினருக்கு ஆதரவாக இருந்து செயல்பட்டு வரும் சந்திரபாபு நாயுடுவின் வருகை எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

பிற்பகல் 12.15-க்கு சென்னைக்கு வந்து சேரும் சந்திரபாபு நாயுடு,அண்ணா அறிவாலயத்தில் இன்று பிற்பகல் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.