Connect with us

தமிழகத்தில் 3943, சென்னையில் 2393: ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கொரோனா

செய்திகள்

தமிழகத்தில் 3943, சென்னையில் 2393: ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கொரோனா

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 3943 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4000ஐ நெருங்கிவிட்டது என்பதும் 3900க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவது இன்று 3வது நாள் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் இன்று மட்டும் 2393 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மீண்டும் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 1201 பேர் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 2325 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Continue Reading
To Top