Connect with us

ஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை!!

பொழுதுபோக்கு

ஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை!!

பிக் பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் அபிராமி. கத்துவது, சண்டையிடுவது, அழுவது என பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்தவர் இவர். இதனாலேயே இவருக்கு பெரிதளவில் ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்து கிடையாது.

வெளியே வந்த அபிராமி இதனை சரிசெய்ய, அனைத்து பேட்டிகளிலும் கலகலப்பாக பேசுவது, யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் இருப்பது, பாய்ஸ் கேங்குடன் நட்பு பாராட்டுவது என்று இருந்து வருகிறார்.

ஃபேமசாக ஷெரின், ஷாக்சியுடன் அபிராமி செய்யும் வேலை!!

இதன்மூலம் தற்போது தனக்கென ரசிகர்களைக் கொண்டுள்ளார் என்று தெரிகிறது, லாஸ்லியாவுடன் அவுட்டிங்க் செல்வது போன்று வீடியோ வெளியிட்டு பேமசான இவர் தற்போது இன்னொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

ஷெரின், ஷாக்சியுடன் அவுட்டிங்க் சென்று இருப்பதுபோன்ற ஒரு வீடியோவினை இப்போது அபிராமி வெளியிட்டுள்ளார். இதுவும் வைரலாகி வருகிறது.

ஷாக்சியிடம் இருந்து விலகியே இருந்த இவர், ஷாக்சிக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் கிடைப்பதால் அவருடன் சேர்ந்து சுற்றிவருவதாக ஷாக்சி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top