Connect with us

டி.என்.பி.எல். கிரிக்கெட் – திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்துமா மதுரை பாந்தர்ஸ்

பொழுதுபோக்கு

டி.என்.பி.எல். கிரிக்கெட் – திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்துமா மதுரை பாந்தர்ஸ்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சுடன் மோதுகிறது.



திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2018 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த முறை இறுதிப் போட்டியில் வெற்றி பெற போராடும் என்பதில் சந்தேகமில்லை.

டி.என்.பி.எல். கிரிக்கெட் - திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்துமா மதுரை பாந்தர்ஸ்

இந்த முறை நடந்த அனைத்து ஆட்டங்களிலும் எதிரணியை துவம்சம் செய்யும் படியாகவே ஆடியது. இந்த முறை நடந்த போட்டியில் 1 முறை மட்டுமே தோல்வியடைந்து 6 ஆட்டத்தில் வெற்றி பெற்று திண்டுக்கல் அணி முதலிடத்தில் உள்ளது.


திண்டுக்கல் அணியில் ஜெகதீசன் 398 ரன்களுடன், ஹரி நிஷாந்த் 267 ரன்களுடன் அணியின் வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் ஆடி வருகின்றனர். மதுரை அணியில் அருண் கார்த்திக் 345 ரன்களுடனும் பந்து வீச்சில் கிரண் ஆகாஷ், ரஹில் ஷா  ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சென்னையில் 15 ஆம் தேதி  நடைபெறும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்ளும்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top