Connect with us

டி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், நேற்றிரவு சென்னை  சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் களம் இறங்கின.


இதில் ‘டாஸ்’ ஜெயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி கோபிநாத்தும், கங்கா ஸ்ரீதர் ராஜூவும் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடினர்.

டி.என்.பி.எல். கிரிக்கெட் : திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

ஜே.கவுசிக் ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் ஆனார். கங்கா ஸ்ரீதர் ராஜூ 4 ரன் எடுத்தும், அடுத்து விஜய் சங்கர் 1 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கவுசிக் காந்தி 22 ரன்னிலும், விக்கெட் கீப்பர் சுஷில் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக ஆடிய சசிதேவ் 44 ரன்னில்  ரன்-அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. முருகன் அஸ்வின் 28 ரன்களுடன்  களத்தில் இருந்தார்.

பின்னர் 127 ரன்கள் இலக்கை நோக்கி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆடியது. கேப்டன் ஜெகதீசன் ரன் எதுவும் எடுக்காமலும், சதுர்வேத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு வீரர் ஹரி நிஷாந்த் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அபினவ் 21 ரன்னிலும், விவேக் 23 ரன்னிலும், சுமந்த் ஜெயின் 46 ரன்னிலும் அவுட் ஆகினர்.

திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்களே எடுத்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top