Connect with us

ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

செய்திகள்

ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன இந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

அதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னையில் மட்டும் பள்ளிகள் திறக்க கால தாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

Continue Reading
To Top