Connect with us

தமிழக மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வேலைவாய்ப்பு

தமிழக மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மீன்வளத்துறையில் அசூர் மீன்பண்ணையில் மீன்வள உதவியாளர் பணியை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

tn-govt-fisheries-department-job

காலிப் பணியிடம் :

மீன்வள உதவியாளர் – 02 காலிப்பணியிடங்கள்

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

  • தமிழில் எழுத படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.
  • நீச்சல், வலை பின்னுதல், அறுந்த வலைகளை சரி செய்தல் மற்றும் வீச்சு வலை வீசுதல் தெரிந்திருக்க வேண்டும்.
  • மீன்துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கன சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு :

18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு ஆணைப்படி வயது தளர்வும் உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மீன்வளத்துணை இயக்குநர் (மண்டலம்), திருச்சி, 17/2 சமது பள்ளித்தெரு, காஜாநகர், திருச்சிராப்பள்ளி – 620 020 என்ற முகவரியில் இருக்கும் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/03/2020030495.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.04.2020 மாலை 5.45 மணி வரை

Continue Reading
To Top