Connect with us

ஏரியில் கொட்டப்பட்ட தக்காளி: பறிப்பு கூலி கூட கிடைக்காத பரிதாபம்

செய்திகள்

ஏரியில் கொட்டப்பட்ட தக்காளி: பறிப்பு கூலி கூட கிடைக்காத பரிதாபம்

காய்கறி மார்க்கெட்டில் தக்காளி கொஞ்சம் வித்தியாசமானது. ஒன்று கிலோ நூறு ரூபாய் என எட்டாக்கனியாக இருக்கும். அல்லது கிலோ ரூ.10க்கும் கீழ் விலை வீழ்ச்சி அடையும்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.100 விற்பனையான தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.10க்கும் குறைவாக மார்க்கெட்டில் கிடைக்கின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் தக்காளி விவசாயிகளின் கண்களில் ரத்தக்கண்ணீர் வடிகிறது.

பல விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுவதால் அழுகி காக்கை குருவிகளுக்கு இரையாகிறது. இந்த நிலையில் விவசாயி ஒருவர் டிராக்டர் நிறைய தக்காளியை மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றார். ஆனால் வண்டி வாடகை கூட கிடைக்காத வெறுப்பில் அனைத்து தக்காளிகளையும் அருகில் இருந்த ஏரியில் கொட்டிவிட்டார். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிறது. இதேபோல் பல விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டி செல்வதும், அதனை பொதுமக்கள் எடுத்து செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top