Connect with us

ஜூன் 30க்கு பின்னரும் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் பரபரப்பு தகவல்

செய்திகள்

ஜூன் 30க்கு பின்னரும் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பதும் சென்னை, மதுரை, தேனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு தற்போது நடைபெற்ற அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக ஜூன் 30ஆம் தேதிக்கு பின்னரும் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்கத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கும் என்று அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் வரும் 29ஆம் தேதி ஆலோசனை செய்யவிருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னரும் மத்திய அரசு ஊரடங்கு குறித்து எடுக்கும் முடிவுக்கு பின்னரும் தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பதால் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

மருத்துவ நிபுணர்கள் ஊரடங்கு நீடிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் தளர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்திற்கு அதாவது ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Continue Reading
To Top