Connect with us

பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை

செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை

பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அந்த தேர்வு ஜூன் ஒன்றாம் தேதி மாற்றப்பட்டது. இருப்பினும் திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஜூன் 15ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றப் பட்டது என்பதும் இந்த தேதியில் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது . இன்று மருத்துவர் குழுவினர்களிடம் ஆலோசனை செய்து வரும் முதல்வர் பழனிசாமி, அவர்களிடம் பொதுத் தேர்வை நடத்துவது குறித்தும் ஆலோசனை கேட்கவிருப்பதாகவும், அதுமட்டுமின்றி பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று மருத்துவக் குழுவுடனான இந்த சந்திப்பு முடிந்ததும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லாக்டவுன் நீட்டிப்பது குறித்தும் அவர் மருத்துவர் குழுவினர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top