Connect with us

வீரமரணம் அடைந்த பழனி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்: குடும்பத்தினர் அஞ்சலி

செய்திகள்

வீரமரணம் அடைந்த பழனி உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்: குடும்பத்தினர் அஞ்சலி

சமீபத்தில் இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக்கின் அருகில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய மற்றும் ராணுவ சீன ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர்

இந்தியா தரப்பில் இருந்து 20 ராணுவ வீரர்களும் சீனா தரப்பில் 35 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய தரப்பில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் உடல் நேற்று அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது அங்கு அவருக்கு இராணுவ மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அந்த கிராமத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் கூடி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்

மேலும் நாட்டுக்காக உயிர் யாகம் செய்த பழனியின் புகழ் என்றும் இருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் பழனியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top