Connect with us

50 ஆண்டுகள் திராவிட இயக்க ஆட்சியில் புதிய திருப்பம்

செய்திகள்

50 ஆண்டுகள் திராவிட இயக்க ஆட்சியில் புதிய திருப்பம்

தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் ஆட்சி செய்து வந்தாலும், எந்த ஒரு பிரச்சனையிலும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கைகோர்த்து குரல் கொடுத்தது இல்லை. ஒருவர் மீது ஒருவர் பழிபோடும் கலாச்சாரம் மட்டுமே இருந்தது. குறிப்பாக ஜெயலலிதா மற்றும் கருணாநிதி எதிர்க்கட்சிகள் போல் இல்லாமல் எதிரிக்கட்சிகள் போல் நடந்து கொண்டனர்.

இந்த நிலையில் 50 ஆண்டுகால திராவிட இயக்கத்திடம் இல்லாத புதுமை இன்று நடந்துள்ளது. காவிரி விவகாரம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க இன்று தமிழக முதல்வரை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்கள் உள்பட முக்கிய அமைச்சர்கள் உடனிருந்தனர். முதல்முறையாக காவிரி பிரச்சனைக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவுள்ளதால் தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top