Connect with us

ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து: பிரபல பல்கலைக்கழகம் அறிவிப்பு

செய்திகள்

ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து: பிரபல பல்கலைக்கழகம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஒரு சில மாநிலங்களில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட அறிவிப்புகளும் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் நடக்க இருந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது

ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் ஜூலை 1ம் தேதி முதல் நடைபெறும் என சமீபத்தில் அரிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஆனால் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கையை ஏற்கும் வகையில் ஆன்லைனில் நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக திருவாரூர் பல்கலைக்கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது

இந்த அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்துவது சாத்தியமற்றது என ஏற்கனவே கல்வியாளர்கள் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top